ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் இஸ்ரோ மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விண்வெளி கண்காட்சி தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், முன்னாள் கேரள ஆளுநர் சதாசிவம், இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'இது போன்ற விண்வெளி கண்காட்சியால் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும். மாணவர்களின் தனித்தன்மை வெளிக்கொண்டுவர இக்கண்காட்சி உதவும். இக்கண்காட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் உலகே வியக்கும் வண்ணம் இந்தியா முன்னேறி வருகிறது.'