ஈரோடு:அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலைப்பகுதியை சேர்ந்தவர், சிவராஜ். இவரது மனைவி சிவம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் சிவம்மாளுக்கு நேற்று (ஏப் 27) நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவம்மாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
வரும்வழியில் தாமரைக்கரை பர்கூர் வழியில், ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறித்து நின்றது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆம்புலன்சை அதே இடத்தில் நிறுத்தினார். பின்னர் சுமார் அரை மணி நேரம் ஆம்புலன்ஸ் அங்கேயே நின்றது.