ஈரோடு:தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று(ஜன.24) கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் தமிழ்நாடு எல்லையான தாளவாடி மலைப்பகுதி கிராமங்களான அருள்வாடி, மெட்டல் வாடி, பீமராஜ் நகர், குருபரண்டி கிராமத்துக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் முகாமிட்டன.
இதனால் காட்டு யானைகள் விவசாயத் தோட்டப் பகுதியில் நடமாடுவதைக் கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனத்துறை ஊழியர்கள் விவசாய நிலங்களில் நடமாடிய காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.