ஈரோடு: மரப்பாலம் பகுதி நேதாஜி வீதியில் அங்கம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் ராமசாமி என்பவருடன் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்யத் தொடங்கியது. இம்மழையானது இரவு முழுவதும் நீடித்தது. தொடர்ந்து பெய்துவந்த மழையால், அங்கம்மாள் வசித்துவந்த ஓட்டு வீடு முழுவதும் ஈரம் பரவியது.
இதனால் இன்று (அக்டோபர் 3) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் சுவர், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுவரானது அங்கம்மாள், ராமசாமி மீது விழுந்ததால், இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.