தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈ தொல்லை தாங்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்

கோழிப்பண்ணையில் மலைபோல் குவித்து வைத்திருக்கும் கோழிக்கழிவுகளால் கிராமம் முழுவதும் ஈ தொல்லையால் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்

ஈ தொல்லை தாங்க முடியலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்
ஈ தொல்லை தாங்க முடியலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்

By

Published : Aug 12, 2022, 8:04 PM IST

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே உள்ள பூந்துறை சேமூரில் தனியாருக்குச் சொந்தமான சுப்ரீம் பவுல்ட்ரி பிரைவேட் லிமிடெட் என்னும் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளின் கழிவுகளை முறையாக அகற்றாமல் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் பூந்துறை சேமூர் கிராம மக்கள் ஈ தொல்லையால் நிம்மதி இழந்து வருகின்றனர்.

மேலும் இங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சாப்பிடும்போது சாப்பாட்டில் ஈ விழுந்து, அந்த சாப்பாட்டையே சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் வாந்தி, மயக்கம், பேதி போன்ற பல்வேறு உடல் நிலையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈ தொல்லை தாங்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்

ஈ தொல்லையால் நிம்மதியாக உறங்க முடியாமல், சாப்பிட முடியாமல், இயல்பாக வேலைக்குச்செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். உடனடியாக, ஈ தொல்லையிலிருந்து பொதுமக்களைக்காப்பாற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details