தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி தகராறு - 11 பேர் கைது

ஈரோடு: ஆந்திராவிலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட, தீரன் தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்த 6 பேர் உள்பட 11 பேரை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி
மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி

By

Published : Nov 29, 2020, 4:58 PM IST

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூரிலிருந்து கேரளாவுக்கு செல்ல இருந்த லாரியை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தீரன் தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்த ஆறு நபர்கள் தடுத்து நிறுத்தி, லாரியில் அதிக மாடுகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது, லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தும் லாரி ஓட்டுநரை அடித்தும் துன்புறுத்தினர்.

இதனிடையே, 13 மாடுகள், 9 எருமைகளை பாதுகாப்பின்றி ஒரே லாரியில் ஏற்றிச் சென்றதாகவும், கால்நடை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்தவர்களும், லாரியின் கண்ணாடியை உடைத்து துன்புறுத்தியதாக தீரன் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது லாரியில் வந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் பெருந்துறை காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்தனர். இரண்டையும் ஒரே வழக்காக எடுத்துகொண்ட காவல்துரையினர், இருதரப்பினரையும் சேர்ந்து 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை தடுத்து நிறுத்திய தீரன் தொழிற்சங்கப் பேரவையின் மாநில செயலாளர் கார்த்திகேயன், மதன்குமார், மோகன்தாஸ், வெள்ளோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த கவின், திங்களூரைச் சேர்ந்த விஜயபாலன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details