ஈரோடு மாவட்டம் சுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வாங்கி கொடுப்பவர். இந்நிலையில், முனுசாமியை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, முனுசாமியை விடுதலை செய்ய வலியுறித்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்தனர்.
அப்போது, திடீரென பெண்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 37 பெண்கள் உட்பட 51 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின், பெண்களை மட்டும் விடுதலை செய்து 14 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து புகார் அளிக்க வந்தவர்கள் பேசுகையில், ‘மக்களுக்கு பட்டா வாங்கிக் கொடுக்கும் விவகாரத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசுக்கும் முனுசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாட்டு கழகம் தமிழ்செல்வன் அதில், சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு முனுசாமியை பட்டியல் இனத்தின் பெயரைக் கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது சிறையில் அடைப்பது கண்டனத்திற்குரியது எனவும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செங்கல்பட்டில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 25 பயணிகள் படுகாயம்!