தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் நிதி நிறுவனம் முன்பு பெண் மகனுடன் அமர்ந்து தர்ணா!

ஈரோடு : சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் வாகனத்தை திருப்பி தராததை கண்டித்து இளம்பெண் குழந்தையுடன் தனியார் நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

By

Published : May 28, 2019, 11:27 PM IST

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த அக்கரைகொடிவேரியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. காய்கறி வியாபாரியான இவர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று சரக்கு ஆட்டோவை வாங்கி திருப்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் கருப்புசாமி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மனைவி உமாமகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அவரது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடனில் வாங்கிய ஆட்டோவிற்கு சரிவர தவனை செலுத்தமுடியாமல் போயுள்ளது. இதையறிந்த நிதி நிறுவன ஊழியர்கள் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நிதி நிறுவனம் சார்பில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அபராத வட்டியை குறைத்து சுலப தவணையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் உமாமகேஸ்வரியும் கடன் தொகையை முழுமையாக செலுத்தியுள்ளார். ஆனால் ஆட்டோவை திருப்பி தராமல் நிதி நிறுவன ஊழியர்கள் அவரை கடந்த ஒருமாத காலமாக அலையவிட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று நிதி நிறுவனம் எதிரே தனது மகனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்ட்டார். இதையறிந்து வந்த ஊழியர்கள் உமாமகேஸ்வரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details