தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதி முன்பாக போதையில் தகராறு செய்த நபரால் பரபரப்பு! - பரபரப்பு

ஈரோடு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நீதிபதி வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் மது போதையின் உச்சத்தில் இருந்த நபர் நீதிபதி முன்பாக ரகளையில் ஈடுபட்டார்.

நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக மதுபோதையில் தகராறு செய்த நபரால் பரபரப்பு
நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக மதுபோதையில் தகராறு செய்த நபரால் பரபரப்பு

By

Published : Nov 11, 2022, 9:26 PM IST

ஈரோட்டில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என எண்ணற்ற அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான தொழிலாளர் நல நீதிமன்றம் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற தொழிலாளர் நல வழக்குகளை நீதிபதி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மது போதையின் உச்சத்தில் இருந்த நபர் நீதிபதி முன்பாகவே நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தைத்தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் போதை ஆசாமியை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த நீதிமன்றம் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருவதால், மற்ற நாட்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் குடிமகன்கள் மற்றும் கஞ்சா போதை ஆசாமிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக மதுபோதையில் தகராறு செய்த நபரால் பரபரப்பு

பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்த வளாகத்தில் தினமும் ரகளையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நீதிமன்றம் செயல்படும்போது உள்ளே போதை ஆசாமி ஒருவர் சென்று ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நான்கு மாத கர்ப்பிணியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details