நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழையால் சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டோடியது. ஆனால், தெங்குமரஹாடா மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மாயாற்றை கடந்து பவானிசாகர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பரிசலில் ஆபத்தான பயணம் செய்துவந்தனர்.
இயல்பு நிலைக்கு திரும்பிய தெங்குமரஹாடா மக்கள்! - பரிசல் பயணம்
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா மாயாற்றில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அறுவடை செய்த வாழைத்தார்கள் பரிசலில் மறுகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பரிசல் பயணத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது மாயாற்றில் நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் கிராமத்தில் இருந்து பரிசல் மூலம் வெளியூர் சென்ற கிராம மக்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
மேலும், தெங்குமரஹாடாவில் அறுவடை செய்யப்பட்ட வாழை, பப்பாளி பழங்கள் பரிசலில் வைத்து மறுகரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கிராமத்துக்குள் முடங்கி கிடந்த தெங்குமரஹாடா மக்கள், இயல்பு நிலை திரும்பியுள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர்.