ஈரோடு ரயில்வே காலனிப் பகுதியில் வசிப்பவர் பானு. ரயில்வே துறையில் பணியாற்றி வந்த இவரது கணவர் பணியின் போதே மரணமடைந்ததைத் தொடர்ந்து வாரிசுப் பணியின் அடிப்படையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ரயில்வேயில் எலக்ட்ரிகல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகனும், கிருத்திகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் சிறப்பு உதவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் மணி என்பவரின் இளைய மகன் தனது மகளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இதற்கு நியாயம் கேட்டால் மணி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பெண்ணின் தாயார் பானு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியதாவது, தூரத்து உறவினரான மணி என்பவர் திருச்சியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் சதாசிவத்திற்கும், தனது மகள் கிருத்திகாவிற்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து வைப்பது என்று முடிவானது. இந்நிலையில், அதே மாதம் தனது நண்பர்களுடன் ஈரோடு வந்த சதாசிவம் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் மனு திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இரண்டு மாதம் தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கும் சதாசிவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உறவினர் மணி காவல்துறையில் பணியாற்றுவதால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளதாக கூறி, தனது மகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். வாழ்க்கையை இழந்து தவிக்கும் எனது மகள் கிருத்திகாவிற்கு நியாயம் வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையும் படிங்க:நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி கைகோர்க்கும் ஆறு மாநில அமைச்சர்கள்