தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நடிகர்களை தலையில் தூக்கி கொண்டாடுவதே  ஊடகங்கங்கள் செய்யும் தவறு" - சாப்பாடு போடுங்கள் தலையில் தூக்க வேண்டாம்

ஊடகங்களின் மேல் உள்ள தவறே நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

ஊடகங்கங்கள் செய்யும் தவறே நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான்
ஊடகங்கங்கள் செய்யும் தவறே நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான்

By

Published : Sep 11, 2022, 11:21 AM IST

"நடிகர்களை தலையில் தூக்கி கொண்டாடுவதே ஊடகங்கங்கள் செய்யும் தவறு"

ஈரோடு: தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக மனதின் மையம் அறக்கட்டளை என்னும் தனியார் தொண்டு நிறுவனம் நேசம் என்ற தற்கொலை தடுப்பு அமைப்பு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இலவசமாக தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் தொடக்க விழா ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. அதில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சத்யராஜ், "முதல் தலைமுறை பட்டதாரிகள் மேலும் உருவாக வேண்டும் என்றால் நீட் தேர்வு ரத்து செய்யபட வேண்டும். எனக்கு வறுமை இல்லை என்பதால் படிப்பு கிடைத்து விட்டது. ஆனால் ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு கிடைக்க பல்வேறு தடைகள் உள்ளன. ஒரு நடிகனுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய தவறு.

நடிகர்களை ஐன்ஸ்டைன் போன்று நினைத்து கொள்கின்றனர். ஊடகங்களின் மேல் உள்ள தவறே நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான். எங்களுக்கு சாப்பாடு போடுங்கள் தலையில் தூக்க வைக்க வேண்டாம்.

நடிகர்களை தலையில் தூக்கி கொண்டாடுவதே ஊடகங்கங்கள் செய்யும் தவறு

அதேபோல அடுத்த படம் எப்போது, யாருடன் படம், நடிகர் வாங்கும் சம்பளம் என்ன என்று கேட்டால், நான் சொல்ல மாட்டேன். என் வாயை பிடுங்கி அதில் வரும் வார்த்தையை வைத்து என்னை முன்னிலை படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு அருகே வாக்குறுதியை நிறைவேற்றிய பெண் கவுன்சிலர்:குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details