தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து! - சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thimbam hils

By

Published : Nov 22, 2019, 10:58 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள திம்பம் பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்கு திம்பம் மலைப்பாதை வழியாக இயற்கை உரங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

விபத்துகுள்ளான சரக்கு லாரி

அப்போது, சரக்கு லாரி 8ஆவது வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details