தமிழ்நாடு

tamil nadu

'மின் கட்டண உயர்வு மக்களைப்பெரிதும் பாதிக்காது' - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி!

By

Published : Jul 26, 2022, 4:23 PM IST

மின் கட்டண உயர்வு மக்களைப்பெரிதும் பாதிக்காது என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார்.

’மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது’-வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி
’மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது’-வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாணவ மாணவிகளின் ஓட்டத்தை அவர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர், 'இந்தியாவில் எப்போதும் நடைபெறாத அளவு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இது ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரமாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. எனவே, ஈரோடு வஉசி மைதானத்தில் சிந்தடிக் ஓடு தளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது.

உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும். நேற்று அதிமுக தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தியது. அவர்களிடம் பாராட்டு எதிர்பார்க்க முடியாது. மின் கட்டண உயர்வு மக்களைப்பெரிதும் பாதிக்காது என்று ஏற்கனவே மின்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும். அதனால் தான் வீட்டு வரிகூட உயர்த்தப்பட்டது.

ஈரோடு நகரில் குடிநீர் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வருவதாகப் புகார் கூறப்பட்டாலும் இதற்குக் காரணம் முன்பிருந்த அதிமுக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் ஊராட்சி குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவைகளை முறையாக அதிமுக அரசு ஈரோட்டில் செயல்படுத்தவில்லை. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கிறோம்.

பாதாளச்சாக்கடைத்திட்டத்தில்கூட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதையெல்லாம் நாங்கள் சரி செய்து வருகிறோம்' என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

’மின் கட்டண உயர்வு மக்களை பெரிதும் பாதிக்காது’-வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பியாட் ஜோதியானது ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச்சென்று வஉசி பூங்காவில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க:'தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்...' கிறிஸ்துவ மத போதகர்கள் குறித்த அப்பாவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details