ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் 132 ஒப்பந்த தொழிலாளர்களும், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 30 ஒப்பந்த தொழிலாளர்களும், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 22 ஒப்பந்தப் பணியாளர்களும், பவானி அரசு மருத்துவமனையில் 23 ஒப்பந்தப் பணியாளர்களும், குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஆண்கள், பெண்கள் என 10- ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் துப்பரவுப் பணிகள், செக்யூரிட்டி பணிகள், நோயாளிகளை அழைத்துச்செல்வது எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 2022- ம் ஆண்டின் படி அரசு அறிவித்த ஊதியம் நாள் ஒன்றுக்கு 707 ரூபாய் வீதம் மாதம் 21,260 ரூபாய் வழங்கபட வேண்டும்.