சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டெருமை புகுந்துள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.
நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டெருமை: பொதுமக்கள் பீதி - gaur
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்திற்குள் காட்டெருமை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நள்ளிரவில் கிராமத்தில் புகுந்த காட்டெருமை : பொதுமக்கள் பீதி
பின்னர் வனத்துறையினரின் உதவியோடு, காட்டெருமையை ஊர்மக்கள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.