ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 254ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மதிவேந்தன், முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
யானைகள் இறப்பைத் தடுக்க நடவடிக்கை; வனத்துறை அமைச்சர் - வனத்துறை அமைச்சர்
தமிழகத்தில் யானைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, வருங்காலத்தில் அதற்கானப் பணிகள் கொண்டு வரப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
யானைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை; வனத்துறை அமைச்சர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ”தமிழகத்தில் யானைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, வருங்காலத்தில் அதற்கானப் பணிகள் கொண்டு வரப்படும். விவசாயிகள் அமைக்கும் மின்வேலிகள், அகழிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: TRB: 15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!