ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் கால்வாயின் மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்தக் கால்வாயின் வலது மற்றும் இடது கரையோரங்களில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் முறையற்ற நிலையில் 500க்கும் மேற்பட்ட சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் காரணமாக தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கால்வாயில் கலந்தது.
இதன் காரணமாக கால்வாயின் தண்ணீர் முழுமையாக மாசடைந்ததுடன் அதனைப் பயன்படுத்திய விவசாய நிலங்களும் மாசடைந்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் கால்வாயைப் பாதுகாத்திட போராடியும் எந்த பயனும் இல்லை.