தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2020, 3:32 PM IST

ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan
sengottaiyan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் தற்காலிகமாக நடைபெற்று வரும் தினசரி காய்கறி சந்தையில் நகராட்சியுடன் இணைந்து ரோட்டரி சங்கத்தினர் அமைந்திருந்த கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க நடைபாதையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரையும் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க நடைபாதை வழியாக நடந்து செல்லும்போது தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலைத்துறை சார்பில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனியார் பள்ளி மற்றும் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்கம் ஆகியோர் இணைந்து நடமாடும் காய்கறி வாகன சந்தை மூலம் விற்பனை செய்யும் பணியை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோபிசெட்டிபாளையத்திலிருந்து பரிசேதனைக்காக அழைத்துச்சென்ற மூவருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 11 ஆயிரத்து 771 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடை வளர்க்கும் 31 நபர்களுக்கு தீவனங்கள் கொண்டுசெல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் நூற்பாலை சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதியாக 15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். தனியார் பள்ளியின் சார்பில் அவசர ஊர்தி ஏற்பாடு செய்துள்ளனர். அதில் மருத்துவர் செவிலியர் இருப்பர் உடனுக்குடன் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என வைகோவின் கோரிக்கைக்கு முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும்" என்றார்.

பின்னர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேசுகையில், "ஈரோடுமாவட்டத்தில் 28 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 50 நபர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details