தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பள்ளி விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்' - அமைச்சர் செங்கோட்டையன் - பள்ளி விடுமுறையை முதலமைச்சர் அறிவிப்பார்

ஈரோடு: பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

minister sengottaiyan
minister sengottaiyan

By

Published : Mar 14, 2020, 11:11 PM IST

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கண்காட்சி, மகளிர் தின விழா ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்றன.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியினைத் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தென்னரசு, ராஜா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களைச் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன்

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக திங்கள் கிழமை முதலமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருடுபோன 216 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details