ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவாச்சி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் அத்திக்கடவு -அவிநாசி நீரேற்று பாசனத் திட்டப்பணிகளை நேற்று மாலை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது நீரேற்று திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்து, இத்திட்டம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் தனது காரில் அவ்வழியாக சென்றபோது, திடீரென காரில் இருந்து இறங்கி சாலையோரம் நின்ற மக்களிடம் நலம் விசாரித்தார். அப்போது, முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். முகக்கவசம் இல்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.