ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நவம்பர் 8ஆம் தேதி நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் தொடர்ந்து 21 நாள்களாக அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிக்கிறது.