தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த குட்டி யானையை காட்டுக்குள் சேர்த்த வனத்துறை ! - baby elephant

ஈரோடு: கடம்பூர் அருகே பசவளக்குட்டை வனத்தில் இருந்து வழி தவறி ஊருக்குள் புகுந்த குட்டி யானையை மீட்டு காட்டுக்குள் வனத்துறையினர் சேர்த்தனர்

The baby elephant was added to his mother

By

Published : Sep 27, 2019, 6:42 PM IST

Updated : Oct 7, 2019, 10:33 PM IST

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியை ஒட்டி பவளக்குட்டை கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்திற்குள் வன விலங்குகள் அவ்வப்போது புகுந்துவிடுவது வழக்கம். அதுபோல, நேற்றைய தினம் வனத்திலிருந்து வழிதவறி வந்த ஆண் யானைக்குட்டி அப்பகுதியில் இருந்த மக்காச்சோளம் காட்டிற்குள் புகுந்தது.

இதனைப்பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் குட்டியானையை மீட்டு அதற்கு திரவ உணவுப்பொருள்களை வழங்கினர்.

ஊருக்குள் புகுந்த குட்டியானை

அதனைத்தொடர்ந்து குட்டி யானையை மெல்ல மெல்ல துரத்தி வனப்பகுதிக்குள் விரட்டினர் வனத்துறையினர்.

இதையும் படிங்க: யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை!

Last Updated : Oct 7, 2019, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details