ஈரோடு: நசியனூர் ஆட்டையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனூர் சம்பத், மங்கையர்கரசி தம்பதி. மங்கையர்கரசி நிறைமாத கர்ப்பிணியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பிறந்து இரண்டு நாள்களாகி இருந்த நிலையில், மங்கையர்கரசியிடம் இன்று காலையில் குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி செவிலியர் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் மங்கையர்கரசியை கருத்தடை செய்ய வேண்டும் எனச் செவிலியர் அழைத்துள்ளனர்.