சத்தியமங்கலம் அடுத்த கோட்டமாளம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாதவன் லட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தை இல்லை. இச்சூழலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு லட்சுமி கருவுற்றார்.
தற்போது 10 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடம்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் கர்ப்பிணி லட்சுமியை கோட்டமாளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையதில் அனுமதித்தனர்.