தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகள் அட்டகாசம்: 10 ஏக்கர் கரும்புப்பயிர் சேதம் - Sathiyamangalam Elephant Crop Damage

ஈரோடு: தாளவாடி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புப்பயிர்கள் யானைகள் அட்டகாசத்தால் சேதமடைந்தது.

ஈரோடு யானைகள் பயிர் சேதம் தாளவாடி யானைகள் பயிர் சேதம் சத்தியமங்கலம் யானைகள் பயிர் சேதம் Erode Elephant Crop Damage Sathiyamangalam Elephant Crop Damage Thalavadi Elephant Crop Damage
Erode Elephant Crop Damage

By

Published : Jan 18, 2020, 10:27 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் யானைகள் அதிகளவில் உள்ளன. வனத்தையொட்டி உள்ள வனக்கிராமங்களில் மஞ்சள், கரும்பு, மக்காச்சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

உணவு தேடி வரும் யானைகள் அடிக்கடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கமலகண்ணன்(45).

இவரது விவசாய நிலத்தில் கரும்பு, தென்னை, மாமரம் பயிர் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வந்த காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்து நாசம் செய்கின்றன. வனப்பகுதியில் யானையை விரட்ட முயற்சித்தாலும் அவை கிராம மக்களை துரத்துகின்றன.

யானைகள் அட்டகாசம்

கரும்புகளை சாப்பிட்டுப் பழகிய யானைகள், கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்ததால் பழனிசாமி, சிவப்பா, மாதேவப்பா ஆகியோரின் தோட்டத்தில் சாகுபடி செய்த 10 ஏக்கர் பரப்பளவு கரும்புகளையும், 20க்கும் மேற்பட்ட வேலி கற்களையும் சேதப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

கோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல்

ABOUT THE AUTHOR

...view details