தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்ரென்று வந்த சரக்கு வேன், சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் - thalavadi bus driver avoids accident by driving into a pit

ஈரோடு: தாளவாடி அருகே சரக்கு வேன் மீது மோதாமல் இருக்க சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து நடத்துனர். நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்த்தப்பினர்.

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து

By

Published : Nov 11, 2019, 7:39 AM IST

தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு சத்தியமங்கலத்திலிருந்து தலமலை வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தலமலையில் இருந்து தாளவாடிக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து அந்த வழித்தடத்தில் உள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் வனத்துறை சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து

அப்போது தாளவாடியிலிருந்து அதிவேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று பேருந்து மீது மோத வரும் போது பேருந்தின் ஓட்டுநர் சதுார்த்தியமாக வேன் மீது மோதாமல் பேருந்தை சாலையோர பள்ளத்தில் இறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைப் பொழிவு காரணமாக முன் சக்கரம் புதைமண்ணில் சிக்கி நின்றதால் அதில் வந்த பயணிகள் வேறு வாகனத்தில் ஏற்றி தாளவாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாளவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘இனி திருநங்கைகளும் திமுக உறுப்பினர் ஆகலாம்’ - பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details