ஈரோடுசூரம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நேற்று (மார்ச்.9) தனது காரில் கடைவீதிக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்கு பன்னீர்செல்வம் பூங்கா வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கருங்கல் பாளையத்தை சேர்ந்த திருமலைசாமி என்பவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயங்கிய நிலையில் அருகே உள்ள ஈரோடு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.