ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள துண்டன் சாலை கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இன்று கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலையின் கழுத்திலிருந்த அரை பவுன் தாலிக்கொடி, கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.