ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாதம்பாளையத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயசீலன் (29) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
மைனர் பெண்ணை சீரழித்த கொடூரன் கைது..! - raping case
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயசீலன்
அப்போது, புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் ஜெயசீலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.