ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலைக்கு செல்லும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஐந்து வயது மகள் வீட்டின் முன்பு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, சிறுமியின் வீட்டருகே உள்ள கடையில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, சிறுமி வீட்டின் முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேடியுள்ளனர். அப்போது சிறுமிக்கு டெய்லர் பழனிசாமி பாலியல் தொந்தரவளித்ததைக் கண்டு, சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.