தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல். 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்லுக்கு மூன்று நாள்கள் உள்ள நிலையில், நாளை (ஏப். 4) மாலை7 மணிக்கு வேட்பாளர்கள் பரப்புரை ஓய்கிறது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் நாளை (ஏப்.4) முதல் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தேர்தல் நாளான்று வாக்காளர்களுக்கு மதுப்பாட்டில் வழங்க, அரசியல் கட்சியினர் கர்நாடகத்தில் இருந்து மதுபாட்டில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1,230 பாட்டில்கள் பறிமுதல்
அப்போது தாளவாடி தொட்டகாசனூரில் ஆலம்மாள் என்பவரிம் வீட்டில் 654 மதுபாட்டில்களும், சூசைபுரம் மனோகர்லால் ஜெயின் என்பவரது வீட்டில் 576 மதுபாட்டில்களும் என மொத்தம் 1,230 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1,230 மதுபாட்டில்கள் பறிமுதல் கர்நாடகத்தில் இருந்து வேனில் மதுபாட்டில் கடத்தப்பட்டு, வீட்டில் பதுக்கி வைத்திருந்து தேர்தல் நாளான்று விநியோகிக்க தயாரான போது, மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு-கர்நாடகம் எல்லையில் காவல் துறையினர் சோதனை
இது தொடர்பாக சூசைபுரத்தைச் சேர்ந்த மனோகர்லால் ஜெயின், தொட்டகாஜனூரைச் சேர்ந்த ஆலம்மாள் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர். தேர்தல் நெருங்குவதால் இரு மாநில எல்லையில் வரும் வாகனங்களை காவல் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உரிய அனுமதியில்லாத 150 மதுபாட்டில்கள் பறிமுதல்!'