தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடகுவைத்த நகையை திரும்பத் தரக்கோரி நகை உரிமையாளர் தர்ணா! - முத்தம் பாளையம்

ஈரோடு: அடகுவைத்த நகையைத் திரும்பத் தரக்கோரி தனியார் நிதி நிறுவனம் முன்பு அமர்ந்து நகையின் உரிமையாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு தனியார் நிதி நிறுவனம் முன்பு தர்ணா போராட்டம்!
ஈரோடு தனியார் நிதி நிறுவனம் முன்பு தர்ணா போராட்டம்!

By

Published : May 1, 2021, 8:13 AM IST

Updated : May 1, 2021, 8:34 AM IST

ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜ். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள மணப்புரம் கோல்ட் நிதி நிறுவனத்தில் தனது ஐந்தரை பவுன் நகையை ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கு அடகுவைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஏப். 30) அவர் தனது நகையை மீட்டுக்கொள்ள நிறுவனத்திற்கு வந்துள்ளார். நிதி நிறுவன அலுவலர்கள், தொடர்புடைய நகைகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏலத்தில் விட்டுவிட்டதாகவும் ஏலம்விட்டது போக மீதம் 4,400 ரூபாய் தொகையை மட்டும் பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் தனியார் நிறுவனம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அடகுவைத்த நகையைத் திரும்பத் தரக்கோரி தனியார் நிதி நிறுவனம் முன்பு தர்ணா!

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து நகைக்கான வட்டியைச் செலுத்திவருகிறேன். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தனியார் நிதி நிறுவனம் எனது நகையை ஏலத்தில் விட்டுவிட்டது, எனவே உடனடியாக காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு எனது நகையை மீட்டுத் தர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நிதி நிறுவனத்திடமும், நகையை அடகுவைத்தரஞ்சித்திடமும் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆக்சிஜன் முகக்கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

Last Updated : May 1, 2021, 8:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details