பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் தீவிரமாக வழங்கப்படுகின்றன. மேலும் புத்தகங்களை மாணவர்கள் வாங்கிச் செல்வதற்கு முன்பாக வகுப்பு வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த வகுக்கப்பட்ட நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தகுந்த இடைவெளியுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இதுபோன்று கணினி வழி பாடங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மடிக்கணினி மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், முலனூர், அலங்கியம் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்து, பாட புத்தகங்களை வாங்கி சென்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கல்வி மாவட்டங்களில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை படிக்கும் 34,650 மாணவ, மாணவிகளுக்கும், 6 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் 56,813 மாணவ, மாணவிகளுக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 18,641 பேருக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் பணி இன்று தொடங்கியது. மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல்