தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி மாறுதல் கலந்தாய்வை புறக்கணித்த பட்டதாரி ஆசிரியர்கள்

சத்தியமங்கலத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பணி மாறுதல் கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம்
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம்

By

Published : Jan 29, 2022, 10:15 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் மலைப்பகுதிகளில் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என்று 80 பள்ளிகள் உள்ளன. இதில் 93 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் மலை சுழற்சி பணி மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பணி மாறுதல் வழங்கப்படும்.

அந்தவகையில் இந்தாண்டுக்கான கலந்தாய்வு நேற்று(ஜன.28) மாவட்ட கல்வி அலுவலர் மாதேஷ் தலைமையில் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் 93 ஆசிரியர்களில் 50 ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதேஷ் பணி மாறுதல் உத்தரவை வழங்கினார். மீதமுள்ள 43 ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆண்டுதோறும் பணி மாறுதல் வழங்கப்படுவதால் மலைப்பகுதி மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் குறைந்தது மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்ற வேண்டும். மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி வகுப்புகள் வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details