தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் - மருத்துவர் ராஜா! - கொரோனோ வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்

ஈரோடு: கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜா தெரிவித்துள்ளார்.

corona virus precaution
corona virus precaution

By

Published : Mar 10, 2020, 12:08 AM IST

ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது கொரோனா வைரஸ் குறித்து, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்; மற்றவர்களிடம் பேசும்போது தள்ளி நின்று பேசுமாறும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கை குட்டைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், சளி காய்ச்சல் வந்தவர்களுக்கு எல்லாம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் பேசிய மருத்துவர் ராஜா இந்திய மருத்துவ சங்கத்தினைச் சேர்ந்த, மருத்துவர்கள் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு மிகவும் விழிப்போடு செயல்பட்டு வருகிறது. மக்கள் முடிந்த வரை அதிகக் கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும். கொரோனா பாதிப்பைக் கண்டறிய தமிழ்நாட்டில் இரு இடங்களில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றது' எனத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் - மருத்துவர் ராஜா!

கோழி இறைச்சியால் கொரோனா பரவும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சந்தேகங்கள் இருப்பின் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details