ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முன்னதாக தமிழருவி மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டிற்கு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் தேர்தலைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் தயாராக இருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்று கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். அவர் அரசியலுக்கு வருவதில் இரண்டு கருத்துக்கள் இல்லை.
பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் உண்மை. பெரியார் கருத்து குறித்தோ அவர் சமூக செயல்பாடு நிலை குறித்தோ, அவரது அரசியல் குறித்தோ எதிர்த்தோ அல்லது மறுத்தோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.