தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மருத்துவத்துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நான்கு ஆண்டுகளாக வழங்காமல் மத்திய அரசு மறுத்து வருவதாகவும், அதனை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஈரோடு: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tamil Tigers protest against central government denying reservation!
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாநகர துணை செயலாளர் கௌதம் வள்ளுவன் தலைமை தாங்கினார். மேலும், அக்கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.