நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து இன்று 101 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயரும் போது உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்திருந்த நிலையில், அணையில் 85 அடி உயரத்திலுள்ள உபரிநீர் போக்கு மதகில், நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நீர்க்கசிவினால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நாளை அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயரும் போது அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.