ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குறுமந்தூரில் வேளாண்மைக் கருவிகள் வாடகை மையம், தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாராந்திர இயக்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 95 விழுக்காடு மானியத்துடன் விவசாயத்திற்குத் தேவையான நான்கு டிராக்டர்களை வழங்கினார்.
தொடர்ந்து அயலூர் செம்மாண்டம் பாளையம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதியைத் தொடங்கி வைத்தார். பின்னர் உள்நோயாளிகளுக்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு படுக்கைகள் கொண்ட அறையைத் திறந்துவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பத்து தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இன்னும் இரண்டு தொலைக்காட்சிகளில் பாடம் குறித்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அரசு வேண்டுகோளை ஏற்று தொலைக்காட்சி நிறுவனங்கள் தன்னலம் கருதாது நேரம் ஒதுக்கியதற்கு நெஞ்சாார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன். கியூஆர் கோடு மூலம் கல்வியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.