கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு-கர்நாடகா எல்லையிடையே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாகச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் பேசிய காவல் துறையினர், வாகனங்களைத் திருப்பியனுப்பினர். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் பால், மருந்து, காய்கறி லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.