தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்க வேண்டும்' - தமாகா கோரிக்கை - covid-19

ஈரோடு: தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இலவச முகக் கவசம் வழங்க வேண்டும் என தமாகா மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறித்தியுள்ளார்.

Tamil Nadu Government should provide free mask to the public
Tamil Nadu Government should provide free mask to the public

By

Published : Mar 14, 2020, 9:21 PM IST

ஈரோடு ரயில்நிலயத்தில், தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணி சார்பில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமாகா மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு இலவசமாக ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமாகா சார்பில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் வழங்கும் நிகழ்வு

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறையளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details