சென்னை:ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது. 64.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக 51.31 லட்சமும், 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், பரிசுப் பொருட்கள் உட்பட மற்றவை 1.33 லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது" என்றார்.