ஈரோடு : மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வருகை தந்த தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் இன்று (ஜூலை.15) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அரசு கேபிள் நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்களில் தற்போது பயன்பாட்டில் 26 லட்சம் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளன. இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்துள்ளன. மீதமுள்ள எட்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்களைக் காணவில்லை. கடந்த அதிமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம்.
அதிமுக அரசின் அலட்சியப் போக்கு
காணாமல் போன எட்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்களை மீட்டு மீண்டும் அரசிடம் ஒப்படைப்போம். தமிழ்நாட்டில் அரசு செட்டாப் பாக்ஸ்கள் முதலிடத்தில் இருந்தன. ஆனால் கடந்த அதிமுக அரசின் அலட்சிய செயல்பாட்டால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.