தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்! - neet forgery

ஈரோடு: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா கல்லூரி மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

tamil maanila congress youthwing leader yuvaraja give nilavembu kudineer to pepole

By

Published : Oct 1, 2019, 11:54 PM IST

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா கல்லூரி மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக த.மா.கா இளைஞரணி சார்பில் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் இலவச நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய தமாகா

மேலும் காய்ச்சலைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதனை தடுக்கும் விதமாக அரசு, டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது ஏற்று கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் பெற்றோரையும், மாணவரையும் கைது செய்தால் போதாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்" என்றார்

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேச கற்றுக் கொள்ளவேண்டும்' - திருநாவுக்கரசர்!

ABOUT THE AUTHOR

...view details