தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேனரை போல் நோட்டீஸ்கள் ஒட்டுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்! - GK Vasan

ஈரோடு: ப்ளக்ஸ் பேனர்போல் நோட்டீஸ், போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக

By

Published : Sep 26, 2019, 7:12 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணியின் 11ஆவது செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மிக விரைவாக அரசு நிறைவேற்ற வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் தேவை. நாங்குநேரி, விக்கிரவாண்டி ப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்’ என்றார்.

இதையும் படிக்கலாமே: இடைத்தேர்தலின்போது பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும்!

ABOUT THE AUTHOR

...view details