ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. தாளவாடியில் இருந்து நெய்தாளபுரம் வழியாக கோடிபுரத்துக்கு 5 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள கோடிபுரத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது தாளவாடியை நோக்கி சென்றபோது, நெய்தாளபுரம் பகுதியில் சாலையோரம் 6க்கும் மேற்பட்ட யானைகள் நின்றிருந்தன. இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
அரசுப் பேருந்தை காட்டு யானைகள் துரத்தியதால் பயணிகள் அச்சம்!
ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து தாளவாடிக்குச் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
யானைகள் பிளிறியபடி பஸ்சை நோக்கி ஓடிவந்தன.
பின்னர், இரண்டு யானைகள் பேருந்தை நோக்கி ஓடிவந்ததால், பயணிகள் அலறினர். இருப்பினும் அந்த யானைகள் தொடர்ந்து பேருந்தை துரத்தியத்தை, பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. நடுரோட்டில் யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.