தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் வேகமாகப் பரவிவருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக நேற்று (ஏப்ரல் 24) மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க டாஸ்மாக்கிற்குப் படையெடுத்தனர்.