சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், புதுபீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாயி செல்வம் (55) என்பவரது தோட்டத்தில் நுழைந்தன.
பவானிசாகர் அருகே யானைகள் புகுந்து அட்டகாசம்: கரும்பு பயிர் சேதம்
ஈரோடு: பவானிசாகர் அருகே வாழை, கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செல்வம் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள், கரும்பு பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் கரும்பு பயிரை சேதப்படுத்தும் சத்தம் கேட்ட அப்பகுதி விவசாயிகள் யானைகளை பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் யானைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.