ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள ஆப்பக்கூடல் பகுதியில் தனியார் (சக்தி) சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வாகம், சென்ற ஏழு மாதங்களுக்கு முன்பு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்பிற்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.